கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் அதே துறை சார்பில் பூங்கா அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து பூங்கா அமைத்த நிலையில், அந்த பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த பூங்கா திட்டம் முடங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பூங்கா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.