குழித்துறை நகராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி பகுதியில் விஸ்வாசம் கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமலும், செடிகள் வளர்ந்து புதராகவும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். மேலும், பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காணப்படுகிறது. எனவே பூங்காவுக்கு செல்லும் சாலையை சீரமைப்பதுடன், புதர்களை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.