செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குத் தாம்பரத்தில் காந்தி பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் செடி, கொடி அடர்ந்து புதர்போல் உள்ளது. மேலும், பூங்காவில் உள்ள கழிவறை சேதம் அடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இங்கு உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.