புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-07-05 11:33 GMT
  • whatsapp icon
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள சுற்றுச்சுவரின் வெளிப்பகுதி புதர்கள் மண்டிய நிலையில் சுகாதாரமற்று காணப்படுகிறது. இந்த பகுதியை பலர் கழிப்பிடம் போல் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் புதர்களை அகற்றி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நவீன கழிப்பிட வசதியை இலவசமாக ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்