புதுவையில் உள்ள 2 பூங்கா தவிர அனைத்தும் மூடியே கிடக்கிறது. பூங்கா என்றால் ஓய்வு எடுக்கவும், நடை பயிற்சி செய்வதும் பல வருடமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வாலிபர்கள் பூங்காவில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சொன்னால் கேட்பதில்லை. எனவே, அனைத்து பூங்காவிலும் செடி, கொடி வளர்த்து புல் தரை அமைத்தால் கிரிக்கெட் விளையாட வேறு இடம் தேடி போய் விடுவார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா?