பூங்கா பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-18 09:23 GMT
  • whatsapp icon
வலங்கைமான் பேரூராட்சி மன்னார்குடி மெயின் ரோட்டில் கடைத்தெரு பள்ளிவாசல் அருகே பயன்பாடின்றி சாலையோர பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு தரப்பினர் நடைபயிற்சி செய்து வந்தனர். இதே போல் சிறுவர்களும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி வந்தனர். தற்போது இந்த பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் நடைபயிற்சி செய்வோர் மிகவும் அவதி ப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்