வரலாற்று சின்னம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-17 09:14 GMT
ஆசாரிபள்ளம் சந்திப்பில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் பாதையில் வேம்பனூர் குளத்தின் அருகே மன்னர்கள் காலத்தில் அரச குடும்பத்தினர் உலா வரும் போது ஓய்வெடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்ட சுண்ணாம்பு மடம் (அக்பர் பீடம்) எனப்படும் ஓய்வு பீடம் உள்ளது. தற்காலத்தில் இந்த வழியாக காலையில் பலர் நடைபயிற்சி செல்கிறவர்கள் மழை வந்தால் இங்கு ஒதுங்கி நிற்பது வழக்கம். இந்த பீடம் தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்து கீழே விழுந்த நிலையில் உள்ளது. அழிந்து வரும் வரலாற்று சின்னத்தை சீரமைத்து, அழகுபடுத்தி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ. ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்