வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வாகனங்களில் வருவோர் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த, மழை, வெயிலில் இருந்து காத்திட பத்திர அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவோர் தங்களின் வாகனங்களை ரோட்டிலேயே ஆங்காங்கே நிறுத்துகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. மக்கள் நலன் கருதி அதிகாரிகள் வாகன நிறுத்துமிடம் அமைப்பார்களா?
-சிங்காரம், வாலாஜா.