வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபால் அலுவலகம் அருகில் 4 ரோடுகள் மிகக் குறுகலாக உள்ளன. அங்கு சாலையை ஆக்கிரமித்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள். இதனால் நெரிசல் ஏற்பட்டு சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. நான்கு முனை சந்திப்பில் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிமூலம், வாலாஜா.