ஒடுகத்தூரை குருவராஜபாளையம் கிராம பஸ் நிறுத்தம் அருகில் பெரிய புளியமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. புளியமரத்தின் அடிப்பகுதி பழுது ஏற்பட்டும், பொந்து விழுந்தும் காணப்படுகிறது. அது, இரட்டை புளியமரமாகும். அது, எந்த நேரத்திலும் இரண்டாக பிளந்து விழ வாய்ப்புகள் உள்ளது. பழுதடைந்த புளிய மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், குருவராஜபாளையம்.