வேலூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிக்காக பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அதற்காக. தெருவின் தொடக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த சம்பந்தப்பட்ட தெருவின் பெயர் பலகையை பிடுங்கி ஓரமாக வைத்து விட்டு, மேற்கண்ட பணிகளை தொடங்கினார்கள். பல இடங்களில் பணிகள் முடிந்து விட்டது. ஆனால், தெருக்களின் பெயர் பலகையை ஏற்கனவே பிடுங்கிய இடத்தில் மீண்டும் நட வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விஷ்ணு, வேலூர்.