சுடுகாடை சரி செய்வார்களா?

Update: 2025-10-12 18:04 GMT

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகரம் ஊராட்சி பெரியகரம், பூங்கொல்லைமேடு, காந்திநகர், கல்லாங்குத்து போன்ற பகுதிகளில் பெரியகரம் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும். அங்கு பெரிய அளவில் பள்ளம் உள்ளது. மழை பெய்தால் சுடுகாட்டில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. பெரியகரம் சுடுகாட்டில் தண்ணீர் தேங்காதவாறு சமன் படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்