வாலாஜா பழைய தாலுகா அலுவலகம் முன்பு அம்மா உணவகம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பெரிய அளவில் உடைந்து அங்கு குட்டை போல் கழிவுநீர் தேங்கி உள்ளது. இது, பல மாதங்களாக உள்ளதால் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக கழிவுநீர் கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-ஸ்ரீபன், வாலாஜா.