திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை அங்கு கட்டி வருகின்றனர். இதனால் மாட்டுத்தொழுவதாம காட்சியளிக்கிறது. எனவே உடனடியாக கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.