ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சி கொல்லங்குட்டை கிராமத்துக்கு ரேஷன் கடை பல ஆண்டுகளாக பாரண்டப்பள்ளி கிராமத்தில் இயங்கி வருகிறது. அந்த ரேஷன் கடையை எங்கள் கிராமத்துக்கு மாற்ற கோரி பல முறை மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராம மக்கள் வெகுதூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. பாரண்டப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன்கடையை கொல்லங்குட்டை கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வீ. சேட்டு, கொல்லங்குட்டை.