தேசூர் அருகே மகமாய்திருமணி குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்ட முன்வர வேண்டும்.
-பெ.ஆனந்தன், மகமாய்திருமணி.