கடலூர் நத்தப்பட்டு அருகே பெண்ணை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.