திருப்பத்தூர் ஐ.டி.ஐ. அருகே நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை அந்த இடத்தில் எந்தவித பஸ்களும் நிற்பதில்லை. இதனால் நிழற்கூடம் பகல் நேரத்தில் குடிமகன்களின் டாஸ்மாக் பாராகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே பயணிகள் நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், திருப்பத்தூர்.