வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் தெருக்களை குறிக்கும் பெயர் பலகைகள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் பல தெருக்களில் மீண்டும் பெயர் பலகைகள் சரியாக வைக்கப்படாமல் தவறான தெரு பெயர்களை காட்டிய படி உள்ளன. மீண்டும் சரியாக பலகைகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், வேலூர்.