பெயர் பலகை மாற்றப்படுமா?

Update: 2025-11-09 17:04 GMT

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகியம்மன் கோவில் பெயர் திருவண்ணாமலை மாவட்டம் என்பதற்கு பதிலாக சம்புவராயர் மாவட்டம் என்று உள்ளது. மாவட்டத்தை பிரித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. இதை இன்னும் மாற்றாமல் வைத்துள்ளனர். இந்தப் பெயர் பலகையை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தேவிகாபுரம்.

மேலும் செய்திகள்