சந்தவாசல் அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திரசனீஸ்வரன் கோவில் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் மண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டினர். ஆனால் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. அந்தப் பள்ளத்தால் பக்தர்களுக்கு அச்சமாக உள்ளது. ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் கோவிலில் மண்டபம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முனுசாமி, ஏரிக்குப்பம்.