ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கென முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வேலூர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த 3 மாவட்டங்களும் ராணுவத்தில் அதிகமான பணியாற்றும் இளைஞர்களை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இந்த 3 மாவட்டங்களிலும் முன்னாள் படை வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம் அமைக்கப்படுமா?
-குமார், அரக்கோணம்.