வாலாஜா காய்கறி மார்க்கெட் எதிரில் அரசு நூலகம் உள்ளது. அதன் முன்பு உள்ள பகுதி தூய்மையாக இல்லை. செடி கொடிகள் வளர்ந்துள்ளன. நூலகத்துக்கு படிக்க வரும் வாசகர்கள் தங்களின் வாகனங்களை விட ஷெட் வசதி இல்லை. எனவே நூலகத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாசகர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் அமைத்துத் தர வேண்டும்.
-ராமச்சந்திரன், வாலாஜா.