மனுக்களுக்கு ரசீது வழங்கப்படுமா?

Update: 2025-10-12 11:29 GMT

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் நிலையை அறிய முடியவில்லை. இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய ரசீது வழங்குவதோடு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்கு என தனி அலுவலரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ராமச்சந்திரன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்