சோளிங்கர் ஒன்றியம் வேலம் காலனியில் மெயின் ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. கடந்தசில நாட்களுக்கு முன்பு அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிழற்குடை சேதம் அடைந்தது. இதனால் அங்கு பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். வாகனம் மோதி உடைந்த பஸ் பயணிகள் நிழற்குடையை அதிகாரிகள் இடித்து விட்டு புதிய நிழற்குடை கட்டித்தருவார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.