அணைக்கட்டு தாலுகா சத்தியமங்கலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அந்த அலுவலக கட்டிடம் ஆபத்தான முறையில் உள்ளது. இதுபற்றி பலமுறை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரண்ராஜ், சமூக ஆர்வலர், பொய்கை.