பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டும் அவலம்

Update: 2025-09-28 17:52 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் பல்வேறு தெருக்கள், நகர்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளை அறிந்து கொள்வதற்காக அரசு சார்பில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலர் சுவரொட்டிகள், சிறிய அளவிலான பேனர்களை கட்டிவிட்டு செல்கின்றன. இதனால் அந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெயர் பலகைகளில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தடுக்க வேண்டும்.

-நமச்சிவாயம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்