அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பகுதிக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. அந்த மதுபானக்கடையால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-எஸ்.வெங்கடேசன், ஒடுகத்தூர்.