டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

Update: 2026-06-07 11:46 GMT

செய்யாறு ஒன்றியம் மேல்சீசமங்கலம் மதுரா தீபாநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் 400 மீட்டர் தூரத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு சிரமமாகவும், அச்சமாகவும் உள்ளது. அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், மேல்சீசமங்கலம்.

மேலும் செய்திகள்