அணைக்கட்டு தாலுகா கந்தனேரி கிராமத்தில் பாலாற்றில் மணல் குவாரி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எங்கள் பகுதியில் மணல் குவாரி நடத்தினால் சுற்று வட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போக வாய்ப்புள்ளது. எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல்குவாரியை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக வேறொரு இடத்தில் மணல் குவாரியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சக்திவேல், கந்தனேரி.