வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. அந்த ஏரி 4 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. அந்த ஏரியால் 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த ஏரி பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குளம் போல் காட்சியளிக்கிறது. ஏரியை முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-எல்லப்பன்சேகரன், வளத்தூர்.