ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2025-09-21 11:55 GMT

அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள மோசூர் ஊராட்சிக்கு உட்பட்ட நம்மனேரி ஏரிக்கரையில் மரங்கள் ஏதும் வளர்க்கப்படாததால் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரைகள் பலவீனமாக உள்ளன. எனவே ஊரக வளர்ச்சித்துறை ஏரிக்கரையில் பனை மரங்களை வளர்த்து மண் அரிப்பை தடுத்து, பாசன ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரி ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ஆனந்த், மோசூர். 

மேலும் செய்திகள்