ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-08-18 14:09 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் அருகே ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அதிபெரமனூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் நீர் வரத்து உள்ளது. இந்த ஏரிக்கு வரும் கால்வாய் (கட்டுக்கால்வாய்) 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் உள்ளது. கால்வாய் தூர்ந்துபோய் புதர் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால், மழைக்காலங்களில் இக்கால்வாயில் வரும் நீர், ஏரிக்குச் செல்லாமல் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்குச் சென்று வீணாகிறது. இதனால் அதிபெரமனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஏரிக்கு சரியாக நீர்வரத்து இல்லாததால், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே ஏரிக்கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி சீர் செய்ய வேண்டும்.

முத்தமிழ்வேந்தன், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்