வந்தவாசியில் தேரடி சந்திப்பு அருகில் உள்ள ஒத்தவாடை தெருவில் 2 பழைய தேர்களின் பாகங்கள் நீண்ட காலமாக சாலையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தேரின் உடைந்த பாகங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்வேலவன், வந்தவாசி.