அணைக்கட்டு தாலுகா பொய்கை, சத்தியமங்கலம் இரு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் பெரிய குளம் உள்ளது. அந்தக் குளம், கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. குளத்தில் கழிவுநீர் விடப்பட்டு, சுகாதார சீர்கேடாக மாறி விட்டது. குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளத்தில் உள்ள செடி, கொடிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.