வாலாஜாவில் இருந்து அம்மூர் வழியாக திருத்தணியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே அம்மூர் ரெயில் நிலைய தூரத்தை காட்டும் மைல்கல்லை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. அந்த வழியாக செல்வோர் தூரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மைல்கல்லை சூழ்ந்த செடி, கொடிகளை அகற்றி தூர அளவை புதிதாக எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
-செந்தில்குமார், வாலாஜா.