பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

Update: 2025-10-12 18:16 GMT

திருப்பத்தூர் அருகே குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் பஸ்களில் ஏறி தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பள்ளி முன்பு பஸ் ஏறி சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-பிச்சாண்டி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்