வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் ஒன்று பூட்டியே கிடக்கிறது. இதற்கான அதிகாரிகள் யாரும் இங்கு வருவது இல்லை. இதனால் உணவின் தரம்குறித்து ஆய்வு செய்யப்படுவதில்லை. எனவே உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.