வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிகாலை நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் வெளியே வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பு பொதுமக்களும் அவதி அடைகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.