புதர் அகற்றப்படுமா?

Update: 2026-11-29 14:36 GMT

மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் பாரதி நகரில் உள்ள ரோட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பாதையில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இதனால் ரோட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்பவர்களும், அங்கிருந்து ரோட்டுக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வாகனங்கள் தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்