மல்லூர், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்ல மல்லூர் வருகின்றனர். ஆனால் சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் மல்லூருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் மல்லூருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.