மத்தூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலைகளில் உரிய இடங்களில் பெயர் பலகைகள் வைக்கப்படவில்லை. மத்தூர் நகருக்கு செல்லும் பிரிவு சாலை குறித்த அறிவிப்பு பலகைகள், அந்த சாலையை கடந்த பின்னரே அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வேகத்தை குறைத்து வழிதேடும் நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது. எனவே பிரிவு சாலை தொடங்கும் முன்பே பெரிய அளவில் மத்தூர் செல்ல வழிகாட்டும் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.