தெருநாய்களால் தொந்தரவு

Update: 2026-11-29 14:58 GMT

சேலம் நிலவாரப்பட்டி, கவுண்டன்குட்டையில் இருந்து பாலாஜி நகர் செல்லும் வழியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த வழியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருநாய்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ள தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்