சீனாபுரம் ஊராட்சி சூரநாயக்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவுவாயிலில் தொடர் மழையால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அந்த வழியாக நடந்து சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள். பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.