அபாயகரமான விளம்பர பதாகைகள்

Update: 2026-11-29 14:04 GMT

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி பெரிய அளவில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மழையுடன், பலத்த காற்று வீசி வரும் நிலையில் பஸ் நிலையம், கடைவீதிகள், சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாயகரமான நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்