இரவு நேரங்களில் பூட்டப்படும் கழிவறைகள்

Update: 2026-11-29 15:00 GMT

அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இரவு நேரங்களில் இங்குள்ள கழிவறைகள் ஒரு சில நேரங்களில் பூட்டப்பட்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக பெண்கள் பலரும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், மின்தடை சமயங்களிலும் பகல் நேரங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து நேரங்களிலும் கழிவறை முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்