கஸ்பாபேட்டை முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை செல்லும் சாலையில் செங்கரைப்பாளையம்-ஆண்டக்கொத்தாம்பாளையம் இடையே உள்ள சுமார் 1 கி.மீ. தூரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் லாரி, சரக்கு வாகனம் போன்றவை எதிரே வந்தால் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.