தேவூர் சந்தைபேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தேவூர், கோரைக்காடு, அம்மாபாளையம், போயர் தெரு, அம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் இருந்து 770 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த ரேஷன் கடை கட்டிடம் ஆங்காங்கே காங்கீரிட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வந்தது. இதனால் மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் கசிந்து கடையினுள் விழுவதால் ரேஷன் பொருட்கள் நனையும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.