வடிகால் ஓடை தேவை

Update: 2026-11-01 12:51 GMT

  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே ஒரு பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த நிறுத்தத்தின் முன் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் தண்ணீர் நிற்கிறது. இதனால் அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மெர்லின் ஷைலஜா, கீழ் ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்