சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடனேயே சாலையில் பயணிக்கின்றனர். இவை அவ்வப்போது வாகனங்களின் குறுக்கே பாய்வதால் வாகனஓட்டிகள் நிலைதடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?